மூன்று நாள் குடும்ப நலப் பயிலரங்கம்! - அறிமுகம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

இனிமையான இல்லறம்! கனிவான குழந்தை வளர்ப்பு!!


இது கணவன் மனைவியருக்காகவும் பெற்றோர்களுக்காகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மூன்று நாள் குடும்ப நலப் பயிலரங்கம்!

I இனிமையான இல்லறம்!

இல் வாழ்க்கை என்பது - மகிழ்ச்சி, அன்பு, அரவணைப்பு, காதல், பரிவு, பாசம், நெருக்கம், தாம்பத்யம் - இவற்றோடு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, விட்டுக் கொடுப்பது, மன்னிப்பது, அர்ப்பணிப்பது, இவற்றின் விளைவாக - குழந்தைகள், குதூகலம், கொண்டாட்டம் - இவற்றோடு குடும்பத்தில் அமைதி, மன நிம்மதி - இதுவே இனிக்கும் இல்லற வாழ்க்கை!

அதே நேரத்தில், உடலளவில் மட்டுமல்ல, மனத்தளவிலும் கூட பெண்கள் ஆண்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள்! எனவே இல்லற வாழ்க்கை என்பது பல சவால்கள் நிறைந்தது! சவால்கள் எதுவாயினும், அவற்றுக்கு அழகிய தீர்வுகள் இருக்கின்றன! இல்லறத்தை இனிமையாக்கிட விரும்பும் கணவன் – மனைவி இருவருக்கும் ஒரு சேர அளித்திடும் பயிற்சியே “இனிமையான இல்லறம்!“

II கனிவான குழந்தை வளர்ப்பு!

இன்றைய குழந்தைகள் படு சுட்டிகள்! அதிபுத்திசாலிகள்! படு வேகமாக சிந்திப்பவர்கள். அவர்களிடம் அதிசயமான பல திறமைகள் ஒளிந்து கிடக்கின்றன! அவர்கள் வீட்டுக்குள்ளே ஒளிந்திருக்கும் விண்மீன்கள்! இன்றைய குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது என்பது ஒரு பெரிய சவால். அதற்கு நம்மை நாம் தயார் படுத்திக் கொள்ள வேண்டியது நமது பொறுப்பு! இப்பொறுப்பை செவ்வனே நிறைவேற்றிட பெற்றோர்களுக்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பான பயிற்சியே - " குழந்தைகள் சுரங்கங்கள்!"

இனிய தமிழில், சிந்தனையைத் தூண்டும் கேள்வி-பதில் மற்றும் கலந்துரையாடல்களுடன் நடத்தப் பெறும் புதுமையான பயிலரங்கம் இது!

நவீன ஆய்வுகளின் உதவியோடு, இறை வழிகாட்டுதலின் அடிப்படையில் அளிக்கப்படும் பயிற்சி இது!

பயிற்சி பற்றிய கருத்துகள்

15 வருட என் திருமண வாழ்க்கையை திரும்பிப் பார்க்க வைத்தது. சே! இத்தனை வருடம் வீணடித்து விட்டோமோ என்று வருந்துகிறேன்; நான் யார் என்பதை சில கேள்விகளில் என்னை உணர வைத்தீர்கள்.

எல்லா பெண்களும் இது குறித்து மற்றவரிடம் ஆலோசனை கேட்க மாட்டார்கள். இது போன்ற நிகழ்ச்சிகளை அடிக்கடி நடத்துவதின் மூலம் குடும்பத்தை சீராக நடத்த உதவும்.

இது எனக்கு சுய பரிசோதனை போல் இருந்தது. இந்தப் பயிற்சி வகுப்பில் எனக்குப் பிடித்த விஷயம்: மிக எளிமையாக எங்களிடமிருந்து கேட்டு பதிலளித்தது.

இல்லற வாழ்க்கை, கணவன் மனைவி உறவு முறை பற்றி இவ்வளவு விரிவாக யாரும் பேசியது இல்லை; அதை பற்றி பேசிய விதம் நிறைவாக இருந்தது.

இந்த பயிற்சி வகுப்பில் எங்களை மனம் விட்டு பேச வைத்தது எங்களுக்கு மிகவும் பிடித்தது.

அல்ஹம்துலில்லாஹ்! பெண் சமுதாயத்துக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய நிகழ்ச்சியாக உள்ளது.

இந்த கால கட்டத்திற்கு அவசியமான ஒரு பயிற்சி. மிகவும் பயனுள்ள பயிற்சி.

இது போன்ற வகுப்புகள் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளவை. இதன் மூலம் தன்னைத் தானே சோதித்து ஆராய்ந்து கொள்ள ஒரு வழியாக உள்ளது.

என் கணவனை புரிந்து கொள்ள உதவியாக இருந்தது இந்த வகுப்பு – ஒரு சகோதரி



மனதில் இருந்த குழப்பத்திற்கு ஒரு தீர்வு கிடைத்தது. – ஒரு சகோதரி

Comments