பாடம்: 1 அன்றைய மக்கா (சிறுவர் சிறுமியர்க்கு)


அண்ணல் நபி (ஸல்) அழகிய வரலாறு

(சிறுவர் சிறுமியர்க்கு இஸ்லாம் - பாட நூல் வரிசையில்)


பாடம்: 1 அன்றைய மக்கா
----------------------------------------------

1 மக்கா என்பது அரேபியாவில் உள்ள மிக முக்கியமான நகரங்களுள் ஒன்று.

2 இந்த மக்கா நகரில் தான் அண்ணல் நபியவர்கள் சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்தார்கள்.

3 மக்காவில் வாழ்ந்த அரபியர்களில் பலர் வணிகர்கள்.

4 அவர்கள் பல குலங்களாகவும் கோத்திரங்களாகவும் பிரிந்து கிடந்தார்கள்.

5 இனப்பெருமை குலப்பெருமை பேசிக்கொண்டு ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள்.

6  அவர்கள் சிலைகளை வணங்கி வந்தார்கள்.  

7 அவர்கள் மது அருந்துவதில் மூழ்கிக் கிடந்தார்கள்.

8 பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்து வந்தார்கள்.

9 இப்படிப்பட்ட அறியாமைக் கால சூழ் நிலையில் தான் அண்ணல் நபியவர்கள் அங்கே பிறந்தார்கள்.

10 அவர்கள் பிறந்த ஆண்டுக்குப் பெயர் யானை ஆண்டு என்பதாகும்.

Comments