பங்களிப்பு பற்றிய - ஹதீஸ்கள்

விபசாரியான ஒரு பெண் ஒரு கிணற்றின் விளிம்பில் தன் நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்த ஒரு நாயைக் கடந்து சென்றாள் அந்த நாயை தாகம் சாகடிக்கவிருந்தது. அதைக்கண்ட அப்பெண் உடனே தன் காலுறையைக் கழற்றி அதைத் தன் முந்தானையில் கட்டி கிணற்று நீரை இறைத்து அதற்கு கொடுத்தாள் ஆகவே அது பிழைத்து கொண்டது. அவள் ஒர் உயிருக்குக் காட்டிய இந்த கருணையின் காரணத்தினால் அவளுக்கு பாவமன்னிப்பு வழங்கப்பட்டது. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரளி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்,அஹ்மத்


ஒரு நாய் தாகத்தின் காரணமாக மண்ணை நக்கிக் கொண்டிருப்பதை கண்ட ஒருவர் தன் காலுறையைக் கழற்றி அதில் தண்ணீர் அள்ளி அதன் தாகத்தைத் தணித்தார். இச்செயலை ஏற்றுக் கொண்ட அல்லாஹ் அதன் காரணத்தால் அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரளி), நூல் : புகாரீ 168)

உங்களில் ஒருவர் பேரிச்சம் பழத்தின் ஒரு துண்டையாவது (தர்மம்) செய்து நரக நெருப்பிலிருந்து பாதுகாத்து கொள்ள முடியுமாயின் அதை அவர் செய்துக் கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அதியீஇப்னு ஹாதம் (ரளி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

ஜாபிர் (ரளி) அறிவிக்கின்றார்கள்: ''ஒரு முஸ்லிம் ஒரு மரத்தை நட்டு வைத்து, அந்த மரத்திலிருந்து காய்க்கும் கனிகளை ஏதேனும் சாப்பிட்டால் அது அவருக்கு தர்மமாக பதிவு செய்யப்படும். அதிலிருந்து பிறரால் திருடப்பட்டு எடுப்பவையிலும் அவருக்கு தர்மம் செய்த கூலி உண்டு. ஒருவர் அதன் கனிகளை பறித்துக் குறைத்தாலும், அவருக்கு தர்மம் செய்த கூலியாகவே தவிர இருப்பதில்லை'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்).

மற்றொரு அறிவிப்பில்  உள்ளது: ''ஒரு முஸ்லிம் மரம் ஒன்றை நட்டு, விவசாயம் செய்து அதிலிருந்து ஒரு மனிதன்,மிருகம் மற்றும் ஏதேனும் ஒன்று சாப்பிட்டால் அவனுக்கு அது தர்மமாகவே அமையும். என்று நபி (ஸல்) கூறினார்கள்.'' (அனஸ் (ரளி)  – முஸ்லிம்)


அபூஹூரைரா (ரளி) அறிவிக்கின்றார்கள்: 'முஸ்லிம் பெண்களே! ஆட்டுக்கால் குழம்பாயினும் தன் பக்கத்து வீட்டுப் பெண்ணுக்குக் கொடுப்பதை மற்றொரு பெண் இழிவாகக் கருத வேண்டாம்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)

அபூஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ''பாதையின் நடுவில் முஸ்லிம்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்திய ஒருவர் சொர்க்கத்தில் உலாவுவதை நான் பார்த்தேன்'' என்று நபி (ஸல்)  கூறினார்கள். (முஸ்லிம்)

Comments