சிங்கத்துக்கு முன்னால் மனிதன்!


இதனை விட சிறந்ததொரு உதாரணத்தை நான் வேறெங்கும் கேள்விப்பட்டதில்லை!

திறமை, அறிவாற்றல், தன்னம்பிக்கை, மன உறுதி, அர்ப்பணிப்பு உடைய ஒருவன் சூழ்நிலையை மாற்றிக் காட்டுகிறான்!

திறமையற்றவன், அறிவிலி, தாழ்வு மனப்பான்மை, தோல்வி மனப்பான்மை, சோம்பேறித்தனம் - உடைய ஒருவன் சூழ்நிலைக் கைதியாகி தோற்றுப் போகிறான்!

இதனை - "சிங்கம்-மனிதன்" உதாரணத்துடன் விளக்குகிறார் மேதை அலிஜா இஸ்ஸத் பிகோவிச் அவர்கள்.



சிங்கங்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்ட மனிதன் ஒருவன் கொல்லப்பட்டு விடுவது உறுதியே! திறமையற்ற மனிதன் சிங்கத்துக்கு முன்னால் - ஒரு சடப்பொருள்! (object)

ஆனால் சிங்கத்தைப் பழக்குபவனுக்கு (subject) அது பொருந்தாதே! சிங்கம் அவனுக்கு அடிபணிந்து விடுகிறதே!

அது போலத்தான் - தன்னம்பிக்கையும் திறமையும் உடைய மனிதர்கள் சூழ் நிலையை மாற்றிக் காட்டுகிறார்கள். வரலாற்றை மாற்றிக் காட்டுகிறார்கள்.

ஆனால் திறமையற்ற, தோல்வி மனப்பான்மை  உடைய,  அர்ப்பணிப்பு அற்ற, சோம்பேறிகளை சூழ்நிலை விழுங்கி விடுகிறது!

இது இறைவனே விதித்து விட்ட விதி! மாற்றமில்லை!

இதோ அவர் சொன்னது:

Man, if he found himself among lions, would be lost, but this evident law does not apply to a lion tamer.
- Alija Ali Izetbegovic

Comments